இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு
26 மார்கழி 2025 வெள்ளி 14:36 | பார்வைகள் : 339
அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்படும் என்று அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெமா வாங்ஜாம் தாங்டாக் என்பவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 21ம் தேதி ஜப்பானுக்கு செல்லும் வழியில் சீனாவில் அவர் சென்ற விமானம் ஓய்வுக்காக நிறுத்தப்பட்டது. அப்போது, அவரது பாஸ்போர்ட்டை பறித்த சீன குடியேற்ற அதிகாரிகள், அருணாச்சல பிரதேசத்தில் பிறந்ததால் பாஸ்போர்ட் செல்லாது என்றனர். மேலும், அருணாச்சல பிரதேசம் சீனாவைச் சேர்ந்த பகுதி என்றும் கூறினர். இதற்கு இந்திய தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க காங்கிரஸிடம் பென்டகன் சமர்பித்த அறிக்கை; 2049ம் ஆண்டுக்குள் சிறந்த நிலையை அடைய அருணாச்சலப் பிரதேசம், தைவான் மற்றும் தென் சீனக் கடலில் உள்ள பிற பிராந்தியங்கள் மிகவும் முக்கியம் என்று சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு சர்வதேச உயர்மட்டக் குழுவையும், பலமான ராணுவ கட்டமைப்பை உருவாக்குவதை சீனா நோக்கமாக கொண்டிருக்கிறது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டத்தை தணிப்பது என்பது சீனாவின் நீண்டகால இரட்டை உத்தியின் ஒரு பகுதி. சீனா அதன் நட்புநாடான பாகிஸ்தானைப் போல, ராணுவத்தின் மூலம் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கும்.
எனவே, இனி வரும் ஆண்டுகளில் இந்தியா - சீனா இடையிலான உறவில் மோதல் ஏற்படலாம், என தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan