திருவனந்தபுரம் மேயர் தேர்தல்: பாஜ சார்பில் ராஜேஷ் போட்டி
26 மார்கழி 2025 வெள்ளி 13:33 | பார்வைகள் : 142
திருவனந்தபுரம் மேயர் பதவிக்கு நடக்கும் தேர்தலில் ராஜேஷை களமிறக்க பாஜ முடிவு செய்துள்ளது. துணை மேயர் பதவிக்கு ஆஷாநாத் போட்டியிட உள்ளார்.
சமீபதத்தில் நடந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. கடந்த 4 தசாப்தங்களாக இடதுசாரிகள் ஆதிக்கம் நிறைந்த இந்த மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 50 இடங்களில் பாஜ., வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனையடுத்து பாஜவின் முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா மேயர் ஆக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அவருக்கு மேயர் பதவியை வழங்க கட்சிக்குள் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, திருவனந்தபுரம் மேயர் பதவிக்கு வி.வி. ராஜேஷையும், துணை மேயர் பதவிக்கு ஆஷா நாத்தையும் போட்டியிடுவார்கள் என பாஜ பொதுச்செயலாளர் சுரேஷ் அறிவித்துள்ளார். கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
பாஜ மேலிட தலைவர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என மாநில தலைவர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan