Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பரிஸில் கட்டுமான தளத்தில் லிப்ட் காபின் விழுந்து தொழிலாளர் உயிர் ஆபத்தில்!!

பரிஸில் கட்டுமான தளத்தில் லிப்ட் காபின் விழுந்து தொழிலாளர் உயிர் ஆபத்தில்!!

25 மார்கழி 2025 வியாழன் 20:37 | பார்வைகள் : 779


பரிஸின் 13வது மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில், டிசம்பர் 24 புதன்கிழமை, கடுமையான தொழில்சார் விபத்து ஒன்று நடந்துள்ளது. 

சேவை லிப்ட் காபின் திடீரென கழன்று விழுந்ததால், ஒரு தொழிலாளர் சுமார் 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். அவரை மீட்ட அவசர உதவிப் படையினர், இதய–மூச்சுத் திணறிய நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த தொழிலாளர் பிட்டியே-சல்பெத்ரியர் (l’hôpital de la Pitié Salpêtrière) மருத்துவமனையில் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

விபத்தின் காரணங்கள் இதுவரை தெளிவாக தெரியவில்லை. அவர் லிப்டின் உள்ளே இருந்தாரா அல்லது அதன் மேல் பகுதியில் இருந்தாரா என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு, 13வது வட்டார காவல் நிலையம் விசாரித்து வருகிறது.

இதே போன்ற சம்பவம் இதற்கு முன்பும் நடந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு, பாரிஸின் 15வது மாவட்டத்தில் புதிதாக பொருத்தப்பட்ட லிப்ட் காபினை சீரமைக்கும் பணியில் இருந்த ஒரு லிப்ட் நிபுணர், எட்டு மாடிகள் உயரத்திலிருந்து விழுந்தார். அவரை மீட்க வந்த அவசர உதவிப் படையினர் உயிர்ப்பிக்க முடியவில்லை. 46 வயதான அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்