Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பரிஸ் : 18 ஆம் வட்டாரத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

பரிஸ் : 18 ஆம் வட்டாரத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

25 மார்கழி 2025 வியாழன் 18:46 | பார்வைகள் : 440


பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் விறாந்தையில் இருந்து பெண் ஒருவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய நாள் இரவில்  Rue des Abbesses வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை காலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 8.30 மணி அளவில் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர்.

குறித்த கட்டிடத்தின் 5 ஆவது தளத்தில் உள்ள வீட்டின் வரவேற்பு விறாந்தையில், அரை நிர்வாணத்தோடு பெண் ஒருவரது சடலம் கிடந்துள்ளது. நிறைந்த மதுபோதை உட்கொண்டிருந்ததாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துக்கு ஐந்து மணிநேரத்துக்கு முன்பாக, நள்ளிரவு 2 மணி அளவில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

ஆனால் காவல்துறையினரால் குறித்த சத்தம் வந்த வீட்டினை அடையாளம் காண முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்