Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

வடகொரியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் - கிம் ஜோங் உன் ஆய்வு

வடகொரியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் - கிம் ஜோங் உன் ஆய்வு

25 மார்கழி 2025 வியாழன் 17:51 | பார்வைகள் : 814


வடகொரியா, தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த கப்பல், அமெரிக்க கடற்படையின் Virginia-class தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களின் அளவிற்கு சமமானது எனக் கூறப்படுகிறது.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், தனது மகளுடன் இந்த புதிய guided-missile நீர்மூழ்கி கப்பலை அதன் கட்டுமான தளத்தில் ஆய்வு செய்துள்ளார்.

கப்பல் இன்னும் கடலில் இறக்கப்படவில்லை, ஆனால் 8,700 டன் எடை (displacement) கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், பல ஆண்டுகள் நீரில் தங்கும் திறன் கொண்டவை. வேகமாகவும், அமைதியாகவும் இயங்கும்.

தற்போது, இந்த தொழில்நுட்பம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பல் குறித்து பேசிய கிம், “சூப்பர் சக்திவாய்ந்த தாக்குதல் திறன் தான் தேசிய பாதுகாப்புக்கான சிறந்த கவசம்” எனக் கூறியுள்ளார்.

அவர், தென் கொரியாவிற்கு அமெரிக்கா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அனுமதி வழங்கியதை வடகொரிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என விமர்சித்துள்ளார்.

நிபுணர்கள், வடகொரியாவின் இந்த நடவடிக்கை, கொரிய தீபகற்பத்தில் நிலைமை மேலும் பதற்றமடையக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

2021-இல் அறிவிக்கப்பட்ட 5 ஆண்டு திட்டத்தின் கீழ், வடகொரியா பல்வேறு பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைபர்சோனிக் வாகனங்கள், guided-missile destroyer கப்பல்கள் ஆகியவற்றை உருவாக்கி வருகிறது.

நிபுணர்கள், இந்த நீர்மூழ்கிக் கப்பல் அடுத்த 2 ஆண்டுகளில் சோதனைக்கு தயாராகும் எனக் கணித்துள்ளனர்.

வடகொரியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம், ஆசியாவின் பாதுகாப்பு சமநிலையை மாற்றக்கூடிய முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்