பிரெஞ்சு காலனித்துவம் ஒரு அரச குற்றம்! - அல்ஜீரிய பாராளுமன்றத்தில் தீர்ப்பு!!
24 மார்கழி 2025 புதன் 20:53 | பார்வைகள் : 1016
பிரெஞ்சு காலனித்துவத்தின் கீழ் அல்ஜீரியாவை வைத்திருந்தது ஒரு அரச குற்றம் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அல்ஜீரியாவை 1830 ஆம் ஆண்டு தொடக்கம் 1962 ஆம் ஆண்டு வரை தனது காலனி நாடாக பிரான்ஸ் கொண்டிருந்தது. இது ஒரு அரச குற்றம் என பாராளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் வினாவியபோது, ‘அது தொடர்பில் பதிலளிக்க ஏதுமில்லை!’ எனவும், ‘"அல்ஜீரிய உள்நாட்டு அரசியல் குறித்து கருத்து தெரிவிக்கும் உரிமை இல்லை" எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, நாம் அல்ஜீரியாவுடன் இணக்கப்பாட்டை தோற்றுவிக்கும் முயற்சியில் உள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
1960 தொடக்கம் 1966 ஆம் ஆண்டு வரையான ஆறு ஆண்டுகளில் அல்ஜீரிய பாலைவனங்களில் பிரான்ஸ் 17 முறை அணுகுண்டு பரிசோதனைகளை மேற்கொண்டிருந்ததாக அல்ஜீரியா குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan