பிரான்ஸில் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி
24 மார்கழி 2025 புதன் 16:32 | பார்வைகள் : 1360
டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பரிஸ் - பொன்டியில் வசிக்கும் 15 வயதான சானுக்கா ஜெயமன் என்ற சிறுமியே இந்த பெருமையை பெற்றுள்ளார்.
மன்னாரை சேர்ந்த குடும்பத்தை பின்புலமாக கொண்ட சானுக்கா கடந்த எட்டாம் மாதம் பிரான்ஸிற்கு வந்துள்ளார்.
Roll ball போட்டியில் அபார திறமை கொண்ட அவருக்கு, பிரான்ஸ் அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதற்கமைய கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் நடைபெற்று சுற்றுத்தொடரில் பிரான்ஸ் அணி சார்பாக அவர் விளையாடியுள்ளார்.
மன்னாரில் வசித்த காலத்தில் முறையான பயிற்சிகளை பெற்ற சானுக்கா, பிரான்ஸிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக பிரான்ஸ் வந்து குறுகிய காலத்திற்குள் France Roll ball அணியொன்றில் விளையாடும் வாய்ப்பினை அவர் பெற்றுள்ளார்.
சுற்றுத்தொடரில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய போதும், சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan