பொபினிக்கு முகவரியிட்டு €4M மதிப்புள்ள கொக்கைன் - சாள்-து-கோல் விமான நிலையத்தில் ஒருவர் கைது!!
24 மார்கழி 2025 புதன் 15:54 | பார்வைகள் : 855
நான்கு மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய கொக்கைன் போதைப்பொருளைக் கடத்திக்கொண்டு வந்த ஒருவர் சாள்-து-கோல் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரியர் விநியோகம் செய்பவர் போன்று வேடமணிந்து விமானத்தில் வந்த ஒருவர், மருத்துவ உபகரணங்கள் என காட்சிப்படுத்தப்பட் பெட்டியில், இந்த கொக்கைன் போதைப்பொருளைக் கொண்டுவந்துள்ளார். அதன் மொத்த எடை 100 கிலோ எனவும், அதன் மொத்த மதிப்பு 4 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் மெக்ஸிக்கோவைச் சேர்ந்தவர் எனவும், பொபினியில் உள்ள சேமிப்பகம் ஒன்றின் முகவரியிட்டு குறித்த பொதி அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த போதைப்பொருள் கடத்தல் கொரியர் சேவை மூலம் வந்ததால், தெரிந்தே கடத்தப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan