ரோய்சி விமான நிலையத்தில் கிப்பா அணிந்த குழந்தை மீது யூத விரோத தாக்குதல்!!
24 மார்கழி 2025 புதன் 14:57 | பார்வைகள் : 1071
ரோய்சி-சார்ல்ஸ்-டி-கோல் விமான நிலையத்தில் கிப்பா அணிந்திருந்த ஒரு சிறுவன் மீது யூத விரோத வாய்மொழித் தாக்குதல் நடத்தப்படுவதை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பிரெஞ்சு காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. அந்த நபரை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதே விசாரணையின் நோக்கம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் ஜூன் மாதத்தில் ரோய்சி-சார்ல்ஸ்-து-கோல் விமான நிலையத்தில் நடந்துள்ளது. தன்னைப் படமாக்கிக் கொண்ட அந்த நபர் சிறுவனை அணுகி ஆங்கிலத்தில், “நீ பாலஸ்தீனத்தை விடுவிக்கப் போகிறாய், சகோதரா” என்று கூறுகிறார். பின்னர், “நீ பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும்; இல்லையெனில் உன் தொப்பியை ( கிப்லாவை) நான் கிழித்தெடுப்பேன்” என்று கூறியுள்ளார.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், இத்தகைய யூத விரோத செயல்கள் தண்டனை இன்றி விடப்படமாட்டாது என்றும் கூறியுள்ளது. மேலும், யூத மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படுவதாகவும் உறுதியளித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan