பெண்கள் செய்து கொள்ள வேண்டிய முக்கிய பரிசோதனைகள் பற்றி தெரியுமா ?
24 மார்கழி 2025 புதன் 12:36 | பார்வைகள் : 184
இன்றைய நவீன உலகில் பெண்கள் அலுவலகம் மற்றும் குடும்பம் என இரு பணிகளையும் கவனிக்கும்போது, தங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவதால், நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய சில பரிசோதனைகள் அவசியமாகின்றன. முதலில், உடல் பருமனைத் தவிர்க்க பிஎம்ஐ மற்றும் ரத்த அழுத்த பரிசோதனையை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
ரத்த சோகை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஹீமோகுளோபின், வைட்டமின் டி மற்றும் பி12 அளவுகளைச் சரிபார்ப்பது முக்கியம். குறிப்பாக, 30 வயதை கடந்த பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
45 வயதிற்கு மேற்பட்டோர் நீரிழிவு மற்றும் கொழுப்பின் அளவை கண்காணிக்க வேண்டும். மேலும், 60 வயதிற்கு மேல் எலும்பு அடர்த்தி குறைபாட்டை அறிய டெக்கா ஸ்கேன் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக தோல் புற்றுநோய் அபாயம் அதிகரித்துள்ளதால், வருடத்திற்கு ஒருமுறை தோல் பரிசோதனையும் அவசியமாகிறது. இந்த முறையான பரிசோதனைகள் பெண்களின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமையும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan