Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ரஷ்யா, உக்ரைனிடம் பாப்பரசர் லியோ கோரிக்கை

ரஷ்யா, உக்ரைனிடம் பாப்பரசர் லியோ கோரிக்கை

24 மார்கழி 2025 புதன் 11:32 | பார்வைகள் : 179


நத்தார் தினத்தன்று உக்ரைன் - ரஷ்யா போரினை இரு நாடுகளும் நிறுத்தி, உலக அமைதியை கடைபிடிக்குமாறு புனித பாப்பரசர் 14வது லியோ விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டால் பாப்பரசர் கவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே 2022ஆம் ஆண்டு முதல் போர் நிலவி வருகிறது. இப்போர்த் தாக்குதல்களில் இரு தரப்பிலும் பெண்கள், சிறுவர்கள், படையினர் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இப்போரினை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தொடர்ந்து இரு நாட்டு ஜனாதிபதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் அந்த அமைதிப் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

இதனிடையே நாளை வியாழக்கிழமை (25) உலகம் முழுவதும் நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நத்தார் தினத்தன்று நிறுத்தி, அமைதியை கடைபிடிக்குமாறு பாப்பரசர் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், பாப்பரசரின் வேண்டுகோளை ரஷ்யா நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து, அமைதிக்கான தனது கோரிக்கையை ரஷ்யா நிராகரித்தமை தனக்கு கவலையளிப்பதாக பாப்பரசர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரோமுக்கு அருகில் உள்ள காஸ்டல் கண்டொல்ஃபோ (Castel Gandolfo) இல்லத்தில் நேற்று (23) செய்தியாளர்களை சந்தித்த பாப்பரசர்,

“நத்தார் தினத்தன்று போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்ற எனது கோரிக்கையை ரஷ்யா வெளிப்படையாக நிராகரித்துவிட்டதால் மிகுந்த மன வருத்தமடைகிறேன். நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களும் அமைதிக்குரிய நாளினை மதிக்கவேண்டும். குறைந்தபட்சம் நமது மீட்பரின் பிறந்த நாளிலாவது அமைதியை கடைபிடிக்கவேண்டும்.

எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தும் விடயங்களில் ஒன்று, ரஷ்யா போர் நிறுத்தத்தை நிராகரித்தமை. அவர்கள் எனது கோரிக்கையை செவிமடுப்பார்கள் என நான் நம்புகிறேன். உலகம் முழுவதிலும் 24 மணிநேரத்துக்கு அமைதி நிலவும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்