புத்தாண்டு கொண்டாட்டம்! - சோம்ப்ஸ்-எலிசேயில் பல்வேறு கட்டுப்பாடுகள்!!
24 மார்கழி 2025 புதன் 09:39 | பார்வைகள் : 369
புதுவருடத்தை வரவேற்கும் Nouvel An கொண்டாட்டத்துக்கு சோம்ப்ஸ்-எலிசே தயாராகிவருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டினைப் போலவே இவ்வாண்டும் மதுபானத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
கிறிமஸ் நிகழ்வுகளுக்காக இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியில் இருந்து Place Charles-de-Gaulle ( 8 ஆம் வட்டாரம்) பகுதி சுற்றுவட்டம் அனைத்தும் வாகன போக்குவரத்து தடைப்படுகிறது. மாலை 4 மணியில் இருந்து நாளை வியாழக்கிழமை காலை 6 மணிவரை இந்த கட்டுப்பாடு தொடர்கிறது.
அத்தோடு மீண்டும் 29 ஆம் திகதியில் இருந்து மீண்டும் சோம்ஸ்-எலிசே மூடப்பட்டு பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி சாரதிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து, அனைவரையும் சோதனையிடுவார்.
துப்பாக்கி -கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், பட்டாசு, கண்ணாடியிலான பியர் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படும் எந்த ஒரு பொருளையும், வீசக்கூடிய வகையில் இருக்கும் கற்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
அத்தோடு, 1 ஆம் 2 ஆம் ஆபத்து வகைகளுக்கு உட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
அத்தோடு, அப்பகுதியில் உணவகங்கள், அருந்தகங்களின் முற்றத்தில் போடப்பட்டிருக்கும் அனைத்து இருக்கைகளும் இன்று மாலை 4 மணியில் இருந்து நாளை மாலை 4 மணிவரை அகற்றப்பட வேண்டும். அத்தோடு 29 ஆம் திகதி மாலை 4 மணியுடனும் அகற்றப்பட வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan