விண்ணில் பாய்ந்தது அமெரிக்க செயற்கைக்கோள் புளூபேர்ட்; இஸ்ரோ சாதனை
24 மார்கழி 2025 புதன் 13:38 | பார்வைகள் : 123
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டபாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் திட்டமிட்ட தாழ்வட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன் மூலம், இஸ்ரோவின் கனரக ஏவுகணை திறன் உலகளவில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது. இதன் எடை 6,500 கிலோ. இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.
இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திட்டம் வெற்றி
இது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: இன்று நாங்கள் எல்விஎம்-3 எம்6 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளோம். இது அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 என்ற வணிகத் தொடர்பு செயற்கைக்கோளை, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது.
இது எல்விஎம்-3 ராக்கெட்டின் ஒன்பதாவது வெற்றிகரமான ஏவுதலாகும். இந்த திட்டம் வெற்றி அடைந்ததன் வாயிலாக 100 சதவீதம் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த எல்விஎம்-3 எம்6 ராக்கெட் வாயிலாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஏவுதல்களும் வெற்றிகரமாக அமைந்துள்ளன.
இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே இதுதான் மிகவும் அதிக எடை ஆகும். நாங்கள் இந்த செயற்கைக்கோளை 1.5 கிலோமீட்டருக்கும் குறைவான துல்லியத்துடன் விண்ணில் செலுத்தியுள்ளோம். நாங்கள் இந்த ராக்கெட்டின் பேலோட் திறனை தோராயமாக 150 கிலோகிராம் மேம்படுத்தியுள்ளோம். இது இந்தியாவில் ககன்யான் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய ராக்கெட் ஆகும். இவ்வாறு நாராயணன் கூறினார்.
அமெரிக்க செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியதை தினமலர் நேரலை ஒளிபரப்பு செய்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan