Paristamil Navigation Paristamil advert login

கிறிஸ்துமஸ் விடுமுறை: டிசம்பர் 24 அன்று நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசல்!!

கிறிஸ்துமஸ் விடுமுறை: டிசம்பர் 24 அன்று நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசல்!!

24 மார்கழி 2025 புதன் 07:51 | பார்வைகள் : 787


கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, டிசம்பர் 24 புதன்கிழமை பிரான்ஸ் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என பைசன் புயூதே (Bison Futé) அறிவித்துள்ளது. 

புறப்படும் திசையில் தேசிய அளவில்  ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இல்-து-பிரான்ஸ் மற்றும் ஒவர்ன்-ரோன்-ஆல்ப்ஸ் பகுதிகளில் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் என்பதால் ‘சிவப்பு’ எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை முதலே மாலை ஆரம்பம் வரை போக்குவரத்து மிகுந்திருக்கும். நார்மண்டி (A13) மற்றும் அத்திலாண்டிக் கடற்கரை (A10, A11) நோக்கி செல்லும் சாலைகள், ஒவர்ன்-ரோன்-ஆல்ப்ஸ் பகுதியின் (A7) முக்கிய நெடுஞ்சாலைகள், லியோன் கிழக்கு வளையப்பாதை, (A42, A43) மற்றும்  மெடிடரேனியன் கடற்கரை பாதைகள் (A8, A9)  மிகவும் நெரிசலாக இருக்கும். 

கிறிஸ்துமஸ் தயார்ப்படுத்தல்கள், தினசரி பயணங்கள் மற்றும் விழாக்களுக்கு செல்லும் பயணங்கள் இணைந்ததால், குறிப்பாக இல்-து-பிரான்ஸ் பகுதியில் போக்குவரத்து கடும் அழுத்தத்தில் இருக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்