Paristamil Navigation Paristamil advert login

லா போஸ்ட் மீது சைபர் தாக்குதல்: ரஷ்ய ஆதரவுடைய ஹேக்கர் குழு பொறுப்பேற்பு!!!

லா போஸ்ட் மீது சைபர் தாக்குதல்: ரஷ்ய ஆதரவுடைய ஹேக்கர் குழு பொறுப்பேற்பு!!!

23 மார்கழி 2025 செவ்வாய் 20:21 | பார்வைகள் : 737


ரஷ்ய ஆதரவுடைய ஹேக்கர் குழு Noname057(16), டிசம்பர் 22 முதல் லா போஸ்ட் குழுமத்தை குறிவைத்து நடைபெற்று வரும் சைபர் தாக்குதலை தாங்களே நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, தானியங்கி தரவு செயலாக்க அமைப்பின் செயல்பாட்டைத் தடை செய்த குற்றச்சாட்டின் கீழ் தொடங்கப்பட்ட விசாரணையை தேசிய சைபர் பிரிவு (UNC) மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கான பொது அமைப்பு (DGSI) மேற்கொண்டு வருகின்றன.

இந்த தாக்குதலால் லா போஸ்டின் வங்கி கணக்குகள் அணுகல் மற்றும் பார்சல் கண்காணிப்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சில ஆன்லைன் சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியிருந்தாலும், நிலைமை இன்னும் வழமைக்கு திரும்பவல்லை  என்றும் பார்சல் கண்காணிப்பு சேவை கிடைக்கவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Noname057(16) குழு, பிரான்சில் சேவை மறுப்பு (DDoS) வகை சைபர் தாக்குதல்களான அதிக அளவு கோரிக்கைகள் மூலம் டிஜிட்டல் சேவைகளை முடக்குதலை ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. நீதித்துறை அமைச்சகத்தின் இணையதளம், பல பிரிபெக்சூர்கள் மற்றும் பிரான்சின் நகரங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் இத்தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. 

மேலும் கடந்த ஜூலை மாதத்தில், 2023 முதல் பிரான்சில் சுமார் 2,200 தாக்குதல்களில் ஈடுபட்ட இந்த குழுவின் மைய சேவை சிதைக்கப்பட்டதாக பரிஸ் நீதிமன்றம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்