Paristamil Navigation Paristamil advert login

இங்கிலாந்தில் கடும் வெப்பம் - நிபுணர்கள் எச்சரிக்கை

இங்கிலாந்தில் கடும் வெப்பம் - நிபுணர்கள் எச்சரிக்கை

23 மார்கழி 2025 செவ்வாய் 15:45 | பார்வைகள் : 219


பருவநிலை மாற்றம் வெப்பநிலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதால் இங்கிலாந்து அதன் பதிவுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டை எதிர்கொள்ள நேரிடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்றும், 2022 ஆம் ஆண்டு பதிவான அதிகரித்த வெப்ப நிலையை இது விஞ்சக்கூடும் என்றும் தேசிய வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் நாட்கள் உள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டு முழுவதும் சராசரி இங்கிலாந்து காற்று வெப்பநிலை சுமார் 10.05 செல்ஸியஸ் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது 2022 ஆம் ஆண்டில் பதிவான முந்தைய சாதனையான 10.03 செல்சியஸை விட அதிகமாகும்.

குளிரான கிறிஸ்துமஸ் இறுதி புள்ளிவிவரங்களைப் பாதிக்கலாம், ஆனால் 2025 ஆம் ஆண்டு 2022 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய 10.03 செல்ஸியஸ் என்ற சாதனையை முறியடிக்கும் என்று வானிலை அலுவலகம் கூறுகிறது.

கடந்த நான்கு தசாப்தங்களாக இங்கிலாந்தின் ஆண்டு வெப்பநிலை சுமார் 1.0 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பைக் கண்டுள்ளதாகவும் தேசிய வானிலை அலுவலகம் கூறுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்