Paristamil Navigation Paristamil advert login

சிம்பு – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணையுமா?

சிம்பு – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணையுமா?

23 மார்கழி 2025 செவ்வாய் 16:01 | பார்வைகள் : 398


நடிகர் சிம்பு (STR) அடுத்தடுத்து பல முக்கிய படங்களில் பிஸியாக உள்ள நிலையில், பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் ஒரு புதிய படத்தில் இணையும் பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகள் அமைத்து மீதமுள்ள காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘அரசன்’ படத்தை முடித்த பிறகு, சிம்பு அஸ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். இதில் எந்தப் படம் முதலில் தொடங்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளதால், அந்தப் படமே முதலில் தொடங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’: இணையத்தை அதிரவைக்கும் BTS வீடியோ!
இந்த இரு படங்களையும் முடித்த பிறகு, சிம்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கான முதற்கட்ட கதை விவாதங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் கதை இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் முடிவாகவில்லை.

சிம்புவின் இந்த தொடர் பட அறிவிப்புகள் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன!

வர்த்தக‌ விளம்பரங்கள்