Paristamil Navigation Paristamil advert login

விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் சண்முக பாண்டியன்?

விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் சண்முக பாண்டியன்?

23 மார்கழி 2025 செவ்வாய் 15:01 | பார்வைகள் : 176


மறைந்த முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பகிர்ந்துள்ளார்.

வளர்ந்து வரும் இளம் நடிகரான சண்முக பாண்டியன் நடிப்பில் சமீபத்தில் 'கொம்புசீவி' திரைப்படம் வெளியானது. ஒரு சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், "எனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசை. ஆனால், கேப்டன் போன்ற ஒரு மாபெரும் ஆளுமையின் வாழ்க்கையை திரையில் கொண்டு வருவது அத்தனை எளிதான காரியம் அல்ல. அதற்குத் திறமையான மற்றும் சரியான இயக்குநர் அமைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

கேப்டனின் உருவ ஒற்றுமை சண்முக பாண்டியனிடம் இருப்பதால், இந்த படம் உருவானால் அது மிகச்சரியாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது சண்முக பாண்டியன், இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்