Paristamil Navigation Paristamil advert login

அவதானம்: வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் நிறுத்தம்!!

அவதானம்: வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் நிறுத்தம்!!

23 மார்கழி 2025 செவ்வாய் 14:51 | பார்வைகள் : 462


டிசம்பர் 25 முதல் 29 வரை, ஐரோப்பிய வங்கிகளுக்கிடையிலான சாதாரண மற்றும் SEPA பணமாற்றங்கள் தொழில்நுட்ப பராமரிப்பின் காரணமாக நிறுத்தப்படும். 

இந்தத் தடை டிசம்பர் 25 மாலை 4:30 மணி முதல் 28 வரை நடைமுறையில் இருக்கும்; இதனால் சம்பளம், ஓய்வூதியம் அல்லது வாடகை போன்ற பரிவர்த்தனைகள் தாமதமாகலாம். ஆனால் Wero போன்ற உடனடி பணமாற்ற சேவைகளும், அதே வங்கிக்குள் செய்யப்படும் பரிவர்த்தனைகளும் வழக்கம்போல் செயல்படும். 

பணப் பரிவர்த்தனைகள் டிசம்பர் 29 அன்று, டார்கெட் 2 (Target 2) எனப்படும் ஐரோப்பிய வங்கிகளுக்கிடையிலான நிதி பரிமாற்ற அமைப்பு மீண்டும் திறக்கப்பட்ட பின் மட்டுமே கிடைக்கும். இந்த மூடல் கால அட்டவணை ஐரோப்பிய மத்திய வங்கி (BCE) மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அமைப்புகள் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதாக பிரெஞ்சு வங்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இதேபோன்று 2026 ஆம் ஆண்டிலும் ஈஸ்டர் வார இறுதி, மே 1 மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு இடையிலான பணமாற்ற அமைப்பான டார்கெட் 2 தற்காலிகமாக மூடப்படும்; மற்ற பொது விடுமுறை நாட்களில் டார்கெட் 2 செயல்படும். இதனால் நீண்ட கால மூடல் காலங்களுக்கு அருகில் திட்டமிடப்பட்ட பரிவர்த்தனைகளுக்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்க முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்