Paristamil Navigation Paristamil advert login

பாரிய வெடிப்பு! - தாய் - மூன்று பிள்ளைகள் படுகாயம்!!

பாரிய வெடிப்பு! - தாய் - மூன்று பிள்ளைகள் படுகாயம்!!

23 மார்கழி 2025 செவ்வாய் 14:07 | பார்வைகள் : 560


இன்று டிசம்பர் 23, செவ்வாய்க்கிழமை காலை Magny-les-Hameaux (Yvelines) நகரில் உள்ள வீடொன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

காலை 8.30 மணி அளவில் Rue Paul-Cézanne வீதியில் உள்ள வீடொன்று திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 2, 4 மற்றும் 5 வயதுடைய மூன்று பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர்.

உடனடியாக தீயணைப்பு படையினர் களத்தில் இறங்கி, காயமடைந்தவர்களை மீட்டனர். சிறுவர்கள் மூவரும் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வீட்டில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றமைக்குரிய காரணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 70 தீயணைப்பு படையினர் களத்தில் செயற்பட்டனர். வெடிப்பினால் ஏற்பட்ட துகள்கள் 100 மீற்றர் தூரம் வரை பறந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்