Paristamil Navigation Paristamil advert login

2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை

2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை

23 மார்கழி 2025 செவ்வாய் 13:12 | பார்வைகள் : 125


ஏற்கனவே 2026ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வங்காவின் எச்சரிப்புகள் பல வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மீண்டும் 2026ஆம் ஆண்டைக் குறித்த ஒரு எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது.

இளவரசி டயானாவின் மரணம் முதல் கோவிட் வரையிலான பல்வேறு விடயங்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்தவர் பல்கேரியா நாட்டவரான பாபா வங்கா.

பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய பாபாவை, பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடித்தனர் அவரது குடும்பத்தினர்.

அதைத் தொடர்ந்து, தனது கண் பார்வையை இழந்த பின்னரே, தனது முதல் கணிப்பை கணித்த பாபா, தான் காணாமல் போனபோதுதான், தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும், பாபா அந்த ஆண்டைக் குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை அறிவதற்காக அவரது ஆதரவாளர்களான ஒரு கூட்டம் காத்திருப்பது வழக்கமாகவே ஆகிவிட்டது.

அவ்வகையில், 2026ஆம் ஆண்டைக் குறித்த பல விடயங்களை கணித்துள்ளார் பாபா. அவை குறித்த செய்தி ஏற்கனவே வெளியாகியுள்ளது.

2026ஆம் ஆண்டைக் குறித்த பாபாவின் எச்சரிக்கை ஒன்றைக் கூறும் மற்றொரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

2026ஆம் ஆண்டில், ’எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது’ என்பதை மனித குலம் உணரும் ஒரு கட்டத்தை எட்டப்போகிறோம் என பாபா கணித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் நம்புவதாக அந்த செய்தி கூறுகிறது.

குறிப்பாக, பாபாவின் எச்சரிக்கை, தொழில்நுட்பம் மற்றும் ஒழுக்க நெறியைக் குறித்து பேசுவதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

அறிவியலும், மருத்துவமும், நம் கட்டுப்பாட்டை மீறி முன்னேற்றம் காணும் என பாபா கணித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

குறிப்பாக, உடல் உறுப்புகளை செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடையும் என பாபா கணித்துள்ளாராம்.

விடயம் என்னவென்றால், புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் பல்வேறு பரிசோதனைகளை ஒரு பெரிய நாடு விரைவில் அமுல்படுத்த உள்ளதாம்.

அதனால் மருத்துவ உலகுக்கு நன்மை ஏற்படும் அதே நேரத்தில், தங்களுக்கு புற்றுநோய் உள்ளதாக தவறுதலாக காட்டும் பரிசோதனை முடிவுகளால் ஏற்படும் கவலைகள், மருத்துவ செலவுகள் மற்றும் இந்த விடயங்களில் சில குறிப்பிட்ட இடங்களில் வாழும் மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுதல் ஆகிய விடயங்களால் பிரச்சினைகளும் ஏற்படும் என்றும் பாபா கணித்துள்ளதாக கருதப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்