Paristamil Navigation Paristamil advert login

Dugny களஞ்சியத்தில் 3.7 கோடி யூரோக்கள் மதிப்புள்ள மொபைல் மற்றும் கணினிகள் திருட்டு!!!

Dugny களஞ்சியத்தில் 3.7 கோடி யூரோக்கள் மதிப்புள்ள மொபைல் மற்றும் கணினிகள் திருட்டு!!!

23 மார்கழி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 549


Dugny (Seine-Saint-Denis) பகுதியில் உள்ள, மல்டிமீடியா இ-காமர்ஸ் துறையில் செயல்படும் JD.com நிறுவனத்தின் களஞ்சியத்தில், 21 டிசம்பர் இரவு நடந்த கொள்ளையில், 50,000க்கும் மேற்பட்ட கைப்பேசிகள், கணினிகள், ரப்லெட்கள் மற்றும் சில ஹெட்ஃபோன்கள் திருடப்பட்டுள்ளன. 

இந்த திருட்டால் ஏற்பட்ட இழப்பு சுமார் 3.7 கோடி யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. களஞ்சியத்தின் நுழைவாயில் திறந்திருந்ததையும், பல கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததையும் நிறுவனம் திங்கட்கிழமை காலை கண்டறிந்துள்ளது. திருடர்கள் வீடியோ கண்காணிப்பு அமைப்பை செயலிழக்கச் செய்திருந்தனர், மேலும் அந்த இரவில் அலாரம் அமைப்பு செயல்படவில்லை. 

கட்டிடத்தின் உள்ளே, மல்டிமீடியா சாதனங்கள் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 பேலட்டுகள் காணாமல் போய்யுள்ளன. Honor மற்றும் Oppo நிறுவனங்களின் மொத்தம் 50,456 பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக அமைப்புசார்ந்த குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட திருட்டு மற்றும் குற்றச்சங்கம் அமைத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டு, கொள்ளையடிப்பு தடுப்பு பிரிவு வழக்கை விசாரித்து வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்