2028க்குள் 'ஏர் டாக்சி' சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
23 மார்கழி 2025 செவ்வாய் 13:21 | பார்வைகள் : 138
நம் நாட்டில் விரைவில், எலக்ட்ரிக் விமான டாக்ஸி சேவைகள் துவங்கவுள்ளன. அதற்கான கள சோதனைகள் நடந்து வருவதாக விண்வெளித் துறை சார்ந்த, 'ஸ்டார்ட்அப்' நிறுவனமான, சரளா ஏவியேஷன் அறிவித்துள்ளது.
இருசக்கர வாகனங்களை போல, வருங்காலத்தில் வான் வழியே பயணிக்கும், ஏர் டாக்சி சேவைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில், சர்வதேச நிறுவனங்கள் களமிறங்கி இருக்கின்றன.
அந்நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில், கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான, 'சரளா ஏவியேஷன்' 'எலக்ட்ரிக் ஏர் டாக்சி'களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
வரும், 2028க்குள் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரியில், டில்லியில் நடந்த கண்காட்சியின் போது, சூன்யா என்ற ஏர் டாக்ஸி மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அடுத்த தலைமுறை விமான சேவைகளை மேம்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. பெங்களூருவில் உள்ள சோதனை மையத்தில், எலக்ட்ரிக் வெர்டிகல் டேக் ஆப் - லேண்டிங்' எனப்படும், தரையில் இருந்தபடி அப்படியே மேலெழும்புவது, தரையிறங்குவதற்கான கள சோதனைகள் நடந்து வருகின்றன.
கடந்த ஒன்பது மாதத்தில் இத்திட்டம் மிக முக்கிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. பொறியியல் அளவு, செயல்படுத்தும் வேகம் ஆகிய சோதனைகள் திருப்திகரமாக அமைந்து இருக்கின்றன.
எஸ்.ஒய்.எல்.எக்ஸ்.,-1 என பெயரிடப்பட்ட இந்த தனியார் ஏர் டாக்ஸி அதிநவீனமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan