Paristamil Navigation Paristamil advert login

சிறப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது! - ஜனவரியில் புதிய பட்ஜெட்!!

சிறப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது! - ஜனவரியில் புதிய பட்ஜெட்!!

23 மார்கழி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1381


வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற அரசு இதுவரை 49.3 எனும் அரசியலமைப்பை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மற்றுமொரு குறுக்குவழியை அரசு பயன்படுத்தியுள்ளது.

தற்காலிக தேவைக்காக புதிய ’சிறப்பு சட்டமூலம்’ ஒன்றை நேற்று அரசு நிறைவேற்றியுள்ளது. நேற்று டிசம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை இந்த சிறப்பு சட்டமூலத்தை அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது 16 பக்கங்கள் கொண்ட சிறப்பு மற்றும் தற்காலிக சட்டமூலமாகும். இது வரவுசெலவுத்திட்டத்துக்கு பதிலாக, அரசுக்கு தேவையான நிதி ஒதுக்கீடை பெற வழிவகுக்கிறது.

’இது ஒரு தற்காலிக தீர்வுதான். வரவுசெலவுத்திட்டத்தை மிக விரைவில் நிறைவேற்ற வேண்டும்!’ என குறிப்பிட்ட ஜனாதிபதி மக்ரோன், ‘ஜனவரியில் சாத்தியமாகும்’ எனவும் குறிப்பிட்டார். அதேவேளை, இந்த சிறப்பு சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதனை நடைமுறைக்கு கொண்டுவர வாக்கெடுப்புக்கு விடாமல், 49.3 எனும் புகழ்பெற்றா அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் பயன்படுத்த உள்ளர்.

புதிய வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றும் போது அது குறைந்தது நாட்டின் 5% சதவீத பற்றாக்குறையை தீர்க்கவேண்டும் எனும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்