Paristamil Navigation Paristamil advert login

பேருந்துப் போக்குவரத்தில் பசுமை மாற்றம்: டீசலுக்கு பதிலாக தாவர எண்ணெய்!!!

பேருந்துப் போக்குவரத்தில் பசுமை மாற்றம்: டீசலுக்கு பதிலாக தாவர எண்ணெய்!!!

22 மார்கழி 2025 திங்கள் 22:17 | பார்வைகள் : 594


இல்த்-து-பிரான்ஸ் பகுதியில் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் டீசல் எரிபொருள், 2026 நடுப்பகுதிக்குள்  தாவர எண்ணெய்க்கு (végétale hydrotraitée-HVO) மாற்றப்பட உள்ளது. 

உணவுக் கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எரிபொருள், டீசலை விட 80% குறைவான CO₂ வெளியீட்டை உண்டாக்குகிறது. பெரும்பாலான டீசல் பேருந்துகளில் எந்த தொழில்நுட்ப மாற்றமும் இல்லாமல் இதைப் பயன்படுத்த முடியும். 2026க்குள் சுமார் 90% பேருந்துகள் HVO-வில் இயங்கும் என இல்-து-பிரான்ஸ் மொபிலிதே அறிவித்துள்ளது.

2029க்குள் முழுமையாக தூய்மையான போக்குவரத்தை உருவாக்குவதே இலக்காகும்; அதற்காக 70% உயிர்வாயு பேருந்துகள் மற்றும் 30% மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இருப்பினும், தற்போது பல பேருந்துகள் பழையவையாக இருப்பதால், குறிப்பாக புறநகர் பகுதிகளில் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளன. 

2030க்குள் அனைத்து பழைய டீசல் பேருந்துகளும் சேவையிலிருந்து நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்