Paristamil Navigation Paristamil advert login

கடும் குளிர் -மழை -இந்த வாரம் எப்படி இருக்கும்!!

கடும் குளிர் -மழை -இந்த வாரம் எப்படி இருக்கும்!!

22 மார்கழி 2025 திங்கள் 20:29 | பார்வைகள் : 1124


இன்றுதிங்கட்கிழமை 22 முதல் ஞாயிற்றுக்கிழமை 28 டிசம்பர் வரை, பிரான்சின் முழுப்பகுதியிலும் குளிர்கால வானிலை நிலை கொள்ளும்.

இந்த நத்தார் வாரம் மேகமூட்டம், மழை, வெயில் ஆகியவை மாறி வரும் ஒரு கலவையான வானிலையாக இருக்கும்.

டிசம்பர் தொடக்கத்தில் இருந்த அசாதாரணமான வெப்பம் முடிந்துவிட்டது. மற்றும் புத்தாணடு காலத்தில் குளிர் அதிகரிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

வாரம் தொடங்கியவுடன் வெப்பநிலை மெதுவாகக் குறையும், குறிப்பாக வட கிழக்கு பகுதியில். Strasbourg மற்றும் Metz நகரங்களில் வெப்பநிலை 3 °C வரை குறையும். நாட்டின் மற்ற பகுதிகளில் பொதுவாக 7 °C முதல் 9 °C வரை இருக்கும்.

ஒரு குளிரான நத்தார் நோக்கி, குளிர் தொடர்ந்து அதிகரிக்கும், பின்னர் மழை மேலோங்கும்.24 டிசம்பர் அன்று முழு பிரான்சின் முழுப்பகுதியிலும் மிகுந்த மழை பெய்யும்.
அன்றைய தினம் வெப்பநிலை குளிர்கால அளவிலேயே இருக்கும்

Paris : 6 °C
Belfort : 2 °C
Lille மற்றும் Lyon : 5 °C
Bordeaux : 7 °C
 

வர்த்தக‌ விளம்பரங்கள்