Paristamil Navigation Paristamil advert login

பாரிய வெடிவிபத்து - நால்வர் படுகாயம் - உயிராபத்து!

பாரிய வெடிவிபத்து - நால்வர் படுகாயம் - உயிராபத்து!

22 மார்கழி 2025 திங்கள் 19:29 | பார்வைகள் : 1044


Saint-Fons (Rhône) பகுதியில் அமைந்துள்ள Elkem Silicones தொழிற்சாலையில் இன்று திங்கட்கிழமை 22 décembre 2025 அன்று ஒரு பாரிய வெடிவிபத்து  ஏற்பட்டுள்ளது.

சிலிகோன் அடிப்படையிலான பொருட்கள் தயாரிக்கும் இந்த Elkem Silicones தொழிற்சாலை Seveso (seuil haut) வகைப்படுத்தப்பட்ட இடமாகும். இந்த வெடிவிபத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளனர் அதில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

Saint-Fons, Rhône பகுதியில் உள்ள இந்த இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் நான்கு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்கும்படி மாவட்ட ஆட்சியகம் கேட்டுக்கொண்டது. தற்போது விஷத்தன்மை அபாயம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். தீயை மாலை 17 heuresக்கு முன்பாகவே காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.


மதியம் ஆரம்பத்தில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக, மாவட்ட ஆட்சியகத்தின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் தெரிவித்தார். இது “ஹைட்ரஜன் காரணமாக” ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெடிவிபத்து தொழிற்சாலையின் ஒரு ஆய்வகத்தில் ஏற்பட்டது. அதன் பின்னர் 600 m² பரப்பளவு கொண்ட ஒரு கட்டிடத்தில் தீ பரவியது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்க 88 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 34 தரைப்படையினரும் அனுப்பப்பட்டனர். மேலும், 35 தேசிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.


கடுமையான சம்பவங்களில் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் plan Orsec செயல்படுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியகம் தெரிவித்தது.

இந்த வெடிவிபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும், காயமடைந்தவர்கள் அனைவரும் Elkem Silicones நிறுவனத்தின் பணியாளர்கள் எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்

வர்த்தக‌ விளம்பரங்கள்