Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் முதலீட்டுக்கான புதிய வழிகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் முதலீட்டுக்கான புதிய வழிகள்

23 மார்கழி 2025 செவ்வாய் 07:26 | பார்வைகள் : 100


இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம் புதிய உயரங்களை எட்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

2025 மார்ச்சில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்கின. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 9 மாத காலத்திற்குள் இறுதி செய்யப்பட்டது.

பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் பேசினார். இதையடுத்து, இருநாடுகள் இடையே வரலாற்று சிறப்பு மிகுந்த பரஸ்பரம் பயனளிக்கும் வகையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டுள்ளதாக இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் புதிய உயரங்களை எட்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம் புதிய உயரங்களை எட்டும். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான புதிய வழிகளைத் திறக்கும்.

பல்வேறு துறைகளில் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் 20 பில்லியன் முதலீட்டை நியூசிலாந்து அறிவிப்பது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்