Paristamil Navigation Paristamil advert login

நியூசிலாந்துடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம்: வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்

நியூசிலாந்துடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம்: வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்

23 மார்கழி 2025 செவ்வாய் 06:24 | பார்வைகள் : 144


நியூசிலாந்து உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது வரலாற்று சிறப்புமிக்கது என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. இது குறித்து டில்லியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெண்கள் தலைமையிலான குழுவால் 9 மாதங்களில் இந்தியா - நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இது வரலாற்று சிறப்புமிக்கது. இது இந்தியாவின் வேகமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக அமைந்தது. இன்னும் இந்த ஒப்பந்தத்தில் இரண்டு, மூன்று முக்கியமான சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. இந்தியாவின் வர்த்தக ராஜதந்திரத்திற்கு ஒரு பெருமையான தருணம்.

விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழிலாளர்கள், கைவினைஞர்கள், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் மற்றும் இளைஞர்கள் பயனடைவார்கள். ஜவுளி, ஆடை, தோல் மற்றும் காலணி போன்ற உழைப்பு மிகுந்த துறைகளுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்கும். இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்