DRS குறித்து ஐசிசியிடம் கேள்வி எழுப்பிய ஸ்டார்க்
22 மார்கழி 2025 திங்கள் 16:20 | பார்வைகள் : 257
அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஏன் ஒரே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில்லை? என்று மிட்செல் ஸ்டார்க் ஐசிசியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் DRS முறை மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது.
சில சர்ச்சைக்குரிய DRS முடிவுகளுக்கு அவுஸ்திரேலியாவுக்கு, இங்கிலாந்தும் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தின.
Snicko முறையில் தவறு இருந்ததை ஒப்புக்கொண்ட பிறகு, இங்கிலாந்து போட்டி நடுவர் ஜெஃப் குரோவால் மறுஆய்வு மீண்டும் செய்யப்பட்டது.
மேலும், Snickometer உடன் அவுஸ்திரேலியா இதேபோன்ற சம்பவத்தை நடத்தியபோது பதட்டங்கள் அதிகரித்தன.
இதுகுறித்து அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐசிசியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர், "இது பார்வையாளர்கள், அதிகாரிகள், ஒளிபரப்பாளர்கள் என அனைவருக்கும் நிச்சயம் ஏமாற்றமளிக்கிறது. நான் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன். நான் இங்கே எனக்காக மட்டுமே பேசுகிறேன், அதிகாரிகள் அதை பயன்படுத்துகிறார்கள், இல்லையா? அப்படியென்றால், ஐசிசி ஏன் அதற்கான இழப்பை ஏற்க கூடாது?
மேலும், அனைத்துப் போட்டிகளுக்கும் ஒரே ஒரு வழங்குநர் ஏன் இல்லை? அனைத்துத் தொடர்களிலும் ஒரே தொழில்நுட்பத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது? அது ஒருவேளை குழப்பத்தையும், விரக்தியையும் குறைக்குமே. அதனால், நான் இதை இத்துடன் விட்டுவிடுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan