Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணியிடம் முதல் டி20யில் இலங்கை படுதோல்வி

இந்திய அணியிடம் முதல் டி20யில் இலங்கை படுதோல்வி

22 மார்கழி 2025 திங்கள் 16:20 | பார்வைகள் : 156


இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

விசாகப்பட்டினத்தில் நடந்த டி20 போட்டியில் இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் மோதின.

முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்தது.

விஷ்மி குணரத்னே 39 (43) ஓட்டங்களும், ஹர்ஷிதா மாதவி 21 (23) ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணியில் ஷஃபாலி வெர்மா 9 ஓட்டங்களும், ஸ்மிருதி மந்தனா 25 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்த வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடியாக 44 பந்துகளில் 69 ஓட்டங்களும் (10 பவுண்டரிகள்), ஹர்மன்பிரீத் கவுர் 15 (16) ஓட்டங்களும் விளாச, இந்தியா 14.4 ஓவர்களில் 122 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

காவ்யா, இனோகா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அரைசதம் அடித்த ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) ஆட்டநாயகி விருது பெற்றார்.

தோல்வி குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து, "120 ஓட்டங்கள் என்பது தற்காப்பதற்கு போதுமான ஸ்கோர் அல்ல. அடுத்த போட்டியில் நாங்கள் மீண்டு வர வேண்டும். நாங்கள் ஆட்டத்தின் நடுவில் பல தவறுகளை செய்தோம். மேலும், நாங்கள் நடு ஓவர்களில் எங்களின் நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்