பாஜ கூட்டணி வெற்றிக்கு தேர்தல் கமிஷன் தான் காரணம்; காங்கிரஸ்
22 மார்கழி 2025 திங்கள் 14:24 | பார்வைகள் : 155
மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும், தேர்தல் கமிஷனும் தான் காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்துகளுக்கு கடந்த டிசம்பர் 2ம் தேதி மற்றும் 20ம் தேதி என இருகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 246 நகராட்சிகளில், ஆளும் மஹாயுதி கூட்டணி, 178ஐ கைப்பற்றி சாதித்துள்ளது.
இதில், பா.ஜ., 100, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 45, மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 33 நகராட்சிகளை கைப்பற்றி உள்ளன. மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 41 நகராட்சிகளையே பிடித்துள்ளது. இதில், காங்கிரஸ் 26 இடங்கள், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 7 இடங்கள், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களை வென்றுள்ளன.
அதேபோல, 42 நகர பஞ்சாயத்துகளில், மஹாயுதி கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அதில் பாஜ மட்டும் 23 இடங்களை வென்றுள்ளது. மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 7 பஞ்சாயத்துகளை மட்டுமே பிடித்துள்ளது. இந்த வெற்றியை பாஜ மற்றும் மஹாயுதி கூட்டணி கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும், தேர்தல் ஆணையமும் தான் காரணம் என்று காங்கிரஸ் வழக்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது குறித்து மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் கூறுகையில், 'தேர்தல் கமிஷனின் ஆசிர்வாதத்தால் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை. தேர்தல் கமிஷன் ஆளும் கட்சியின் கைப்பாவையாகி விட்டது.
தேர்தல் கமிஷனின் குழப்பமான செயல்பாடு மற்றும் தேர்தலுக்காக ஆளும் கட்சி பணத்தை வாரி இறைத்ததால், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஊழல் மற்றும் எந்த நலத்திட்டங்களையும் செய்யாததால், ஆளும் கட்சியின் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஜனநாயகமும், அரசியலமைப்பும் ஒடுக்கப்பட்டுள்ளன,' என்றார்.
உத்தவ் தாக்கரே சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கூறுகையில், 'இவை அனைத்துக்கும் மேலாக, மஹாயுதி கூட்டணியின் வெற்றிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் செய்யப்பட்ட முறைகேடுகளே காரணம்,' எனக் குற்றம்சாட்டினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan