Paristamil Navigation Paristamil advert login

அவதானம் : பயணச்சிட்டை பரிசோதகர்களுக்கு கமரா!

அவதானம் : பயணச்சிட்டை பரிசோதகர்களுக்கு கமரா!

21 மார்கழி 2025 ஞாயிறு 14:58 | பார்வைகள் : 943


பொது போக்குவரத்து பயணச்சிட்டைகளை பரிசோதிக்கும் அதிகாரிகளது உடையில் கமராக்கள் பொருத்தப்படுவது தற்போது உத்தியோகபூர்வமாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளின் போது பரிசோதிக்கப்பட்ட இந்த விடயம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சென்ற வியாழக்கிழமை வெளியான அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, RATP மற்றும் SNCF நிறுவனங்களுக்குரிய பொது போக்குவரத்தில் பயணச்சிட்டைகளை பரிசோதிக்கும் அதிகாரிகளின் உடைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அதனை இயக்குவதற்குரிய கட்டுப்பாடு முழுக்க முழுக்க குறித்த அதிகாரியிடமே இருக்கும் எனவும், பயணிகளை சோதனையிடப்படுவதற்கு முன்னர் கமராவில் நிகழ்வு பதிவாகிறது என கட்டாயம் அறிவிக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இல்-து-பிரான்சுக்குள் மொத்தமாக 11,000 முகவர்கள் இந்த கமரா உடையை அணிந்துகொள்ள உள்ளதாகவும், கமராவில் காட்சிகள் காணொளி வடிவில் ஒலியுடன் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்