Paristamil Navigation Paristamil advert login

2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை.., என்ன தெரியுமா?

2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை.., என்ன தெரியுமா?

21 மார்கழி 2025 ஞாயிறு 15:31 | பார்வைகள் : 135


உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள Googleஐ நாடுகின்றனர்.

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக Gemini உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் தொடர் காரணமாக, India vs England என்பது அதிகம் தேடப்பட்ட சொற்களில் 2வது இடம் பிடித்துள்ளது.

அரசியல் விவாதங்கள், பொது நிகழ்வுகளில் அதிகமாக பங்கேற்றது மற்றும் ஊடக வெளிச்சம் ஆகியவற்றின் காரணமாக சார்லி கிர்க்கின் பெயர் 3வது இடம் பிடித்துள்ளது.

2025ல் FIFA Club World Cup தொடர்பான தேடல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. எனவே Club World Cup என்ற வார்த்தை 4வது இடத்தில் உள்ளது.

மற்றொரு முக்கிய கிரிக்கெட் போட்டியான இந்தியா vs ஆஸ்திரேலியா ஆண்டு முழுவதும் தேடலில் ஆதிக்கம் செலுத்தியது. எனவே இது 5வது இடத்தில் உள்ளது.

புதிய செயற்கை நுண்ணறிவு தளங்களையும், தேடல் தொழில்நுட்பங்களையும் மக்கள் அதிகம் தேடியதால் DeepSeek மக்களின் கவனத்தை ஈர்த்தது. எனவே இது 6வது இடத்தில் உள்ளது.

இதனைதொடரந்து Asia cup, Iran, iPhone 17 மற்றும் Pakistan and India என்ற வார்த்தைகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்