வெளிநாடு செல்லும் டாக்டர்கள் தாய்நாட்டை குறை சொல்லக்கூடாது: நட்டா
21 மார்கழி 2025 ஞாயிறு 09:14 | பார்வைகள் : 200
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலை யின் 21வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா நேற்று பேசியதாவது:
மருத்துவக் கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, இந்த சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை, இளம் டாக்டர்களான நீங்கள் வழங்க வேண்டும். ஒரு டாக்டரை உருவாக்க, சராசரியாக 35 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவாகிறது.
ஒரு முறை வெளிநாடு சென்ற இளம் டாக்டரிடம், 'ஏன் அங்கு செல்கிறீர்கள்' என, கேட்டேன். அவர், 'இந்தியாவில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை' என்றார்.
இளம் டாக்டர்கள் வெளிநாடு செல்வதற்கு சுதந்திரம் உண்டு. ஆனால், இந்தியாவில் மருத்துவ வசதிகள் இல்லை என, இனி அவர்கள் குறை சொல்ல வேண்டாம்; அவ்வாறு கூறவும் முடியாது.
நம் நாட்டில், ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனை இருந்த நிலை மாறி, அதன் எண்ணிக்கை 23 ஆக தற்போது உயர்ந்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 62 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகப்பெரிய திட்டம். இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan