பரிசில் பட்டப்பகலில் கொள்ளை! பெண்ணை தாக்கி €100,000 மதிப்புள்ள பொருட்கள் சூறை!!
21 மார்கழி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 950
பரிசில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து €100,000 மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இரு முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கைத்துப்பாக்கி ஒன்றினை வைத்து வீட்டில் இருந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். பின்னர் அவரை முகத்தில் குத்தி தாக்கிவிட்டு அவரைக் கட்டி வைத்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த பணம், நகை, விலையுயர்ந்த பொருட்கள் என மொத்தம் €100,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்களை அள்ளிக்கொண்டு தலைமறைவாகினர்.
டிசம்பர் 20, நேற்று சனிக்கிழமை பகல் 2 மணி அளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
காயமடைந்த குறித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan