Paristamil Navigation Paristamil advert login

இன்று நாடு முழுவதும் 59 இடங்களை முடக்கிய விவசாயிகள்!

இன்று நாடு முழுவதும் 59 இடங்களை முடக்கிய விவசாயிகள்!

20 மார்கழி 2025 சனி 19:19 | பார்வைகள் : 372


விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இன்று சனிக்கிழமை 59 இடங்களில் வீதிகளை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1,675 விவசாயிகள் இதில் பங்கேற்றனர். உழவு இயந்திரங்களை வீதிகளில் நிறுத்தி போக்குவரத்தை முடக்கினர்.

அதேவேளை, கிறிஸ்மஸ் சந்தைகள், வணிக வளாகங்கள் என பல இடங்களை முடக்கினர். Bouches-du-Rhône நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் தரிப்பிடத்தில் 300 ஆடுகளை நிறுத்தி அதனை முடக்கியிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியமும், தெற்கு அமெரிக்க நாடுகளும் இணைந்து போட்டுக்கொண்ட (EU-Mercosur) வர்த்தக ஒப்பந்தம் ‘இயற்கையை மாற்றவல்லது!’ என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு விவசாய அமைச்சர் Annie Genevard தெரிவிக்கையில்  “இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!” என தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்