ஜனநாயகனுக்கு எதிரா பராசக்தி திரைப்படம் வெளியாகிறதா ?
20 மார்கழி 2025 சனி 15:14 | பார்வைகள் : 169
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. ஏனெனில் சினிமாவிலிருந்து நிறைய அரசியல்வாதிகள் வந்திருக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர், விஜயகாந்த், கமல்ஹாசன் என சொல்லிக் கொண்டே போகலாம். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் ஆனால் வரவில்லை. தற்போது விஜய் வந்திருக்கிறார்.
சினிமா பிரபலம் அரசியலுக்கு வந்து ஆளுங்கட்சியை எதிர்த்து பேசும் போது அந்த கோபத்தில் அந்த நடிகன் படத்திற்கு பல வகைகளும் குடைச்சல் கொடுப்பார்கள். எம்.ஜி.ஆருக்கு கூட இது நடந்திருக்கிறது. அதேபோல், விஜயும் இதுபோன்ற பிரச்சனைகளை பலமுறை சந்தித்திருக்கிறார். அவரின் தலைவா படத்திற்கு சிக்கல் வந்தது. அதேபோல் அவரின் மெர்சல் படத்தில் இறுதியில் ஜிஎஸ்டி பற்றி அவர் பேசியபோதும் பிரச்சினை வந்தது.
தற்போது ஈரோட்டில் அவர் பேசிய பேச்சு அவரின் ஜனநாயகன் படத்திற்கு பிரச்சினையாக வந்திருக்கிறது என்கிறார்கள். விஜய் நடிப்பில் உருவாகிய ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி ரிலீசாகவிருக்கிறது. அதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. ஆனால் ஜனநாயகன் 9ம் தேதியும், பராசக்தி 14ஆம் தேதியும் வெளியிட முடிவெடுத்தனர்.
ஆனால் நேற்று ஈரோட்டில் விஜய் பேசிய பேச்சு ஆளுங்கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திருப்பதால் ஜனவரி 10ம் தேதியே பராசக்தியை களமிறக்க முடிவெடுத்துளனராம். ஏனெனில், இந்த படத்தை வெளியிடுவது ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ். கண்டிப்பாக பாதி தியேட்டர்களை அவர்கள் தூக்கி விடுவார்கள். இதனால் ஜனநாயகனுக்கு கிடைக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் இந்த படத்தின் வசூலும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan