Paristamil Navigation Paristamil advert login

இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்., Reels மற்றும் Posts-க்கு 5 ஹாஷ்டேக் மட்டுமே அனுமதி

இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்., Reels மற்றும் Posts-க்கு 5 ஹாஷ்டேக் மட்டுமே அனுமதி

20 மார்கழி 2025 சனி 15:24 | பார்வைகள் : 324


சமூக வலைத்தளமான Instagram, Reels மற்றும் Posts-ல் பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 5 எனக் கட்டுப்படுத்தியுள்ளது.

இதற்கு முன், பயனர்கள் ஒரு பதிவில் 30 ஹாஷ்டேக்கள் வரை சேர்க்க முடிந்தது.

இது குறித்து Instagram நிறுவனம், “குறைந்த மற்றும் குறிக்கோள் கொண்ட ஹாஷ்டேக்கள், உள்ளடக்கத்தின் செயல்திறனை மேம்படுத்தும்” என தெரிவித்துள்ளது.

பொதுவான ஹாஷ்டேக்கள் (#reels, #explore) Explore feed-இல் உள்ளடக்கத்தை முன்னிறுத்த உதவாது. மாறாக, செயல்திறனை பாதிக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

இதன் மூலம், ஹாஷ்டேகின் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Instagram, “உங்கள் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய ஹாஷ்டேக்களை மட்டும் பயன்படுத்துங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.

உதாரணமாக, அழகு (Beauty) தொடர்பான பதிவுகள் #beauty, #makeup போன்ற ஹாஷ்டேக்களை பயன்படுத்தினால், அதனை விரும்பும் பயனர்களை எளிதில் சென்றடையலாம்.

ஆனால், பொதுவான ஹாஷ்டேக்கள், பார்வையாளர்களை ஈர்க்காது என நிறுவனம் வலியுறுத்துகிறது.

Instagram, 2011-இல் ஹாஷ்டேக் வசதியை அறிமுகப்படுத்தியது.

சமீபத்தில், நிறுவனம் 3 ஹாஷ்டேக்கள் மட்டுமே அனுமதிக்கும் சோதனையை நடத்தியது.

Instagram தலைவர் Adam Mosseri, “ஹாஷ்டேக்கள் இனி reach-ஐ அதிகரிக்காது” என முன்பே தெரிவித்திருந்தார்.

இந்த புதிய விதிமுறையால், Instagram-ல் உள்ளடக்க உருவாக்குநர்கள் அதிக கவனத்துடன், தொடர்புடைய ஹாஷ்டேக்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம், உள்ளடக்க கண்டுபிடிப்பு மற்றும் பயனர் அனுபவம் மேம்படும் என நிறுவனம் நம்புகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்