Paristamil Navigation Paristamil advert login

ஹர்திக் பாண்டியா அடித்த அதிரடி சிக்சர்...! கேமரா மேன் மீது பலமாக பட்ட பந்து

ஹர்திக் பாண்டியா அடித்த அதிரடி சிக்சர்...! கேமரா மேன் மீது பலமாக பட்ட பந்து

20 மார்கழி 2025 சனி 15:24 | பார்வைகள் : 125


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியின் போது ஹர்திக் பாண்டிய செய்த செயல் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியின் போது, பேட்டிங் ஆட களத்திற்குள் வந்த ஹர்திக் பாண்டியா தனக்கு கோர்பின் போஷ் வீசிய முதல் பந்திலேயே அதிரடியாக சிக்சர் விளாசி மிரட்டினார்.

இந்த பந்து நேராக பறந்து சென்று மைதானத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்த கேமராமேன் மீது பலமாக பட்டது.

இதையடுத்து ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு உடனடியாக கேமராமேனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக கேமராமேன் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் தனது பணியை தொடர்ந்தார்.

இந்திய போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்று இருந்தாலும், போட்டி முடிந்த உடனே பந்து மோதிய கேமராமேனிடம் ஹர்திக் பாண்டியா நேராக சென்று நலம் விசாரித்தார்.

கட்டிப்பிடித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, பந்து பலமாக பட்ட இடத்தில் ஹர்திக் பாண்டியா-வே ஐஸ் பேக் வைத்து ஒத்தடம் கொடுத்தார்.

இந்த சம்பவம் மைதானத்தில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அத்துடன் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்