புதிய வீட்டு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிப்பு!!
20 மார்கழி 2025 சனி 14:24 | பார்வைகள் : 696
2026 ஜனவரி 1 முதல் திறக்கப்படும் புதிய வீட்டு சேமிப்பு திட்டங்கள் (PEL-Plans d'épargne logement) 2% வட்டியில் வருவாய் தரும்; தற்போதைய 1.75% வட்டியுடன் ஒப்பிடும்போது இது அதிகமாகும்.
இந்த மாற்றம் புதியதாக கையெழுத்திடப்படும் வீட்டு சேமிப்பு திட்டங்களுக்கு (PEL) மட்டுமே பொருந்தும், ஏற்கனவே உள்ள திட்டங்கள் அவை கையெழுத்திடப்பட்ட நாளின் வட்டி விகிதத்திலேயே தொடரும். PEL களின் சிறப்பு என்னவென்றால், ஒருமுறை நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் 15 ஆண்டுகள் வரை நிலையாக இருக்கும்.
மேலும், 2011 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட PEL கள் 2026 மார்ச் முதல் தானாகவே மூடப்பட்டு, அதிலுள்ள தொகை சாதாரண சேமிப்பு கணக்குக்கு மாற்றப்படும். 2011க்கு பிறகு திறக்கப்பட்ட PEL களும் காலப்போக்கில் மூடப்படும், ஆனால் 2011க்கு முன் திறக்கப்பட்ட PEL களுக்கு காலவரையறை இல்லை. பிரான்சில், லிவ்ரே Aக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படும் சேமிப்பு திட்டம் PEL ஆகும்; இதைத் திறக்க 225 யூரோ ஆரம்பத் தொகையும், ஆண்டுக்கு குறைந்தது 540 யூரோக்கள் சேமிப்பும் தேவை, அதிகபட்ச வரம்பு 61,200 யூரோக்கள் ஆகும்.
2025 ஜூன் நிலவரப்படி, PEL களில் மொத்தமாக 207.1 பில்லியன் யூரோக்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்று பிரான்ஸ் மத்திய வங்கி (Banque de France) தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan