Paristamil Navigation Paristamil advert login

T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

20 மார்கழி 2025 சனி 14:24 | பார்வைகள் : 121


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் வைத்து பெப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்திய அணி பிப்ரவரி 7ம் திகதி தனது முதல் ஆட்டத்தை அமெரிக்காவுடன் மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய கிரிக்கெட் அணியை சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குகிறார், துணைக் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டி20 அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இஷான் கிஷன் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ், அக்ஷர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், அபிஷேக் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்