Paristamil Navigation Paristamil advert login

எலிசே அரண்மனையில் விருந்து மேசைப் பொருட்கள் திருட்டு: முன்னாள் அதிகாரி மீது சந்தேகம்!!!

எலிசே அரண்மனையில் விருந்து மேசைப் பொருட்கள் திருட்டு: முன்னாள் அதிகாரி மீது சந்தேகம்!!!

19 மார்கழி 2025 வெள்ளி 22:42 | பார்வைகள் : 476


எலிசே அரண்மனையில் இருந்து அரசுத் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய இரவு உணவுகளில் பயன்படுத்தப்படும் மதிப்புமிக்க போர்சலின் (porcelaine)மேசைப் பொருட்கள் பல மாதங்களாக திருடப்பட்டு வந்துள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இந்த திருட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளாக எலிசே அரண்மனையில் தலைமை ஹோட்டல் மேலாளரும் வெள்ளிப் பொருட்களுக்கு பொறுப்பாளருமான தாமஸ் எம். தனது பழமையான பொருட்கள் வியாபாரியான துணையின் உதவியுடன், இவை வர்செய்ல்ஸைச் சேர்ந்த முப்பதுகளில் உள்ள ஒரு இளைஞருக்கு விற்கப்பட்டன. அவர் வரலாற்றில் ஆர்வம் கொண்டவரும், போர்சலின் சேகரிப்பாளரும் ஆவார். நூற்றுக்கும் மேற்பட்ட கப்புகள், தட்டுகள் மற்றும் சாசர்கள் போன்ற திருட்டுப் பொருட்களை வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட அவர், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். முக்கிய சந்தேகநபராக உள்ளார். 

இழப்பின் மதிப்பு பல பத்தாயிரம் யூரோக்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மேசைப் பொருட்கள் அனைத்தும் சேவ்ர் (Sèvres) தேசிய உற்பத்தி நிறுவனத்தின் சொத்துகள் ஆகும். மேலும் “Palais de l’Élysée” என்ற முத்திரையுடன் இருப்பதால், அவற்றை சட்டபூர்வ சந்தையில் விற்க இயலாது. இது பிரான்ஸின் பொதுப் பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட அதிர்ச்சியாகக் கருதப்படுகிறது. 

ஏலங்களில் விற்கப்படும் போது, அந்த நிறுவனத்தின் தட்டுகள் ஆயிரம் யூரோக்களைத் தாண்டும் விலைக்கு செல்லக்கூடும். “எலிசே அரண்மனைக்காக தயாரிக்கப்பட்ட 1861 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு தட்டின் உதாரணத்தை நாம் பார்க்கிறோம். அது வியன்னாவில் 1,300 யூரோக்களுக்கு விற்கப்பட்டது,” என பிரெஞ்சு மண் பானைகள் மற்றும் போர்சலின் நிபுணரான சிரில் ஃப்ரொய்சார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரும் பிப்ரவரி 26 அன்று நீதிமன்றத்தில் ஆஜராவார்கள், மேலும் திருடப்பட்ட பொருட்களின் பெரும்பகுதி மீட்கப்பட்டுள்ளது. விசித்திரமாக, திருட்டுப் பொருட்களை வாங்கியவர் லூவ்ர் அருங்காட்சியகத்தில் பாதுகாவலராக பணியாற்றியவராக இருந்தார்; அவரை மீண்டும் அங்கு பணியாற்ற நீதிமன்றம் தடை செய்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்