ஆன்லைன் சந்தைகளில் விற்கப்படும் பொம்மைகளில் 60% குழந்தைகளுக்கு ஆபத்தானவை!!!
19 மார்கழி 2025 வெள்ளி 14:52 | பார்வைகள் : 489
ஆன்லைன் மார்க்கெட்களில் விற்கப்படும் பொம்மைகள் குறித்து பிரான்சின் மோசடி தடுப்பு துறை (DGCCRF) நடத்திய 2024 ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட 70 பொம்மை வகைகளில் 60% ஆபத்தானதும் விதிமுறைகளுக்கு உட்படாததும் என கண்டறியப்பட்டுள்ளது.
குறைந்த விலை மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து வரும் பொருட்களில் இந்த விதிமுறை மீறல்கள் அதிகமாக இருந்தன. இவை பெரும்பாலும் முழுமையற்ற லேபிள்கள், வழிமுறை குறைபாடுகள் போன்றவற்றுடன், பாதுகாப்பு தரநிலைகளை பின்பற்றாதவையாக இருந்தன.
ஆபத்தான தன்மை என்பது, “சிறிய பிரிக்கக்கூடிய பகுதிகள் அல்லது உடைகள் மற்றும் பொம்மைகளில் உள்ள கயிறுகள் காரணமாக ஏற்படும் மூச்சுத்திணறல் அல்லது கழுத்து இறுக்கம் போன்ற ஆபத்துகள்”, “விரல் ஓவியங்களுக்கு பயன்படுத்தப்படும் பெயிண்ட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறும் அலர்ஜி உண்டாக்கும் பொருட்கள் இருப்பது”, மேலும் “பொம்மைகளில் உள்ள பேட்டரிகளை குழந்தைகள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருப்பதால் அவற்றை விழுங்கும் ஆபத்து ஏற்படுவது” ஆகியவற்றிலிருந்து உருவாகின்றன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இவ்வகையான பொம்மைகள் நெடுஞ்சாலை ஓய்வு மையங்கள், விரைவு உணவகங்கள், நினைவுப் பொருள் கடைகள், தள்ளுபடி கடைகள், திருவிழா சந்தைகள், கிறிஸ்துமஸ் சந்தைகள் என மேலும் அதிகமாக காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாரம்பரிய பெரிய விற்பனையாளர்கள் விதிமுறைகளை பின்பற்றினாலும், இனணயத்தள மார்க்கெட்களில் ஆபத்தான பொருட்கள் அதிகம் காணப்படுவதாக அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இதனால், 1,85,000 க்கும் மேற்பட்ட ஆபத்தான பொம்மைகள் அழிக்கப்பட்டுள்ளன;உதாரணமாக, “பேட்டரிகளை எளிதில் அணுகக்கூடிய மாயக்கோல்கள்”, “கண்ணுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய LED விளக்குகள் கொண்ட ஒளிரும் பந்துகள்” ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan