Paristamil Navigation Paristamil advert login

என்ன விலை கொடுத்தும் மீட்போம்!  அதுவே ரஷ்யாவுக்கான பதில்!!

என்ன விலை கொடுத்தும் மீட்போம்!  அதுவே ரஷ்யாவுக்கான பதில்!!

19 மார்கழி 2025 வெள்ளி 10:48 | பார்வைகள் : 452


என்ன விலை கொடுத்தும் யுக்ரேனை மீட்போம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சூளுரைத்துள்ளார். அதுவே ரஷ்யாவுக்கு நாம் தெரிவிக்கும் பதில் எனவும் அவர் தெரிவித்தார்.

புட்டினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைக் காட்டிலும் இது பயன்மிக்கது. யுக்ரேனை மீட்க என்ன விலை கொடுக்கவும் தயார்!" என மக்ரோன் டிசம்பர் 18, நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற  ஐரோப்பிய மாநாட்டில் வைத்து தெரிவித்தார்.

"ஐரோப்பிய ஒன்றியம் தெளிவான செய்தி ஒன்றை ரஷ்யாவுக்கு அனுப்புகிறது. அது தான் யுக்ரேனுக்கான நிலையான அதரவு!" என ஜேர்மனியின் சான்சிலர் Friedrich Merz தெரிவித்தார்.

பிரான்சில் முடக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துக்களில் இருந்து எடுக்காமல், யுக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோக்கள் கடனுதவி வழங்கப்பட உள்ளதாகவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்