புர்ஜ் கலீபா உச்சியை தாக்கிய மின்னல்: துபாய் பட்டத்து இளவரசர் பகிர்ந்த அழகிய காட்சி
19 மார்கழி 2025 வெள்ளி 08:30 | பார்வைகள் : 293
துபாயின் பட்டத்து இளவரசர் பகிர்ந்த வீடியோ காட்சி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக விளங்கும் துபாயின் பிரபலமான புர்ஜ் கலீபா கட்டிடத்தின் கோபுர உச்சியில் மின் தாக்கும் அரிய காட்சியை துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் படம் பிடித்து பகிர்ந்துள்ளார்.
பட்டத்து இளவரசர் பகிர்ந்த வீடியோவில், இருண்ட இரண்டு மேக கூட்டங்களுக்கு இடையே இருந்து தோன்றிய கூர்மையான மின்னல் ஒன்று புர்ஜ் கலீபா கட்டிடத்தின் உச்சியை முத்தமிட்டு செல்லும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
துபாயின் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது நாட்டின் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் சிறந்த புகைப்படங்களை எடுப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.
பட்டத்து இளவரசர் “துபாய்” என்ற ஒற்றை சொல்லுடன் மழை மற்றும் மின்னலை குறிக்கும் எமோஜிகளுடன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan