Paristamil Navigation Paristamil advert login

கடைக்கு வெளியே நின்ற பிரபல கால்பந்து வீரர் சுட்டுக்கொலை

கடைக்கு வெளியே நின்ற பிரபல கால்பந்து வீரர் சுட்டுக்கொலை

19 மார்கழி 2025 வெள்ளி 08:30 | பார்வைகள் : 125


ஈக்வடார் நாட்டு கால்பந்து வீரர் மரியோ பினீடா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் போதை பொருள் கடத்தல் கும்பலின் ஆதிக்கத்தால் வன்முறை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 9,000 கொலைகள் அங்கு நடந்துள்ளது.

இதே போல், ஈக்வடாரின் குயாகுவில் பகுதியில் பிரபல கால்பந்து வீரர் கடைக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்வடார் நாட்டு கால்பந்து வீரரான 33 வயதான மரியோ பினீடா, பார்சிலோனா ஸ்போர்டிங் கிளப்பிற்காக விளையாடினார்.

அதன் பின்னர், பார்சிலோனா SC அணி, ஃப்ளூமினென்ஸ் மற்றும் எல் நேஷனல் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் குயாகுவில் ஒரு கறிக்கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் வந்த இரு நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இதில் மரியோ பினீடா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் கொல்லப்பட்ட விடயம் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட மரியோ பினீடாவிற்கு, ஃப்ளூமினென்ஸ் மற்றும் பார்சிலோனா SC அணிகள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்