Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் பா.ஜ., கேட்கும் 50 தொகுதிகள்: தலைமை ஒப்புதலுக்கு சென்ற பட்டியல்

தமிழகத்தில் பா.ஜ., கேட்கும் 50 தொகுதிகள்: தலைமை ஒப்புதலுக்கு சென்ற பட்டியல்

19 மார்கழி 2025 வெள்ளி 09:09 | பார்வைகள் : 149


சட்டசபை தேர்தலில் தமிழக பா.ஜ., எதிர்பார்க்கும் 50 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயாரித்து, கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,-வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதி பட்டியலை தயாரித்து பா.ஜ., வினர் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, இந்த பட்டியலை தெரிவிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கட்சியினர் கூறினர்.

பட்டியலில் உள்ள தொகுதிகள்:

திருத்தணி, ஆவடி, அம்பத்துார், துறைமுகம் , ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், விருதுநகர், தாம்பரம், திருப்போரூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம், தளி, திருவண்ணாமலை, திருக்கோவிலுார், ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், ஊட்டி, திருப்பூர் வடக்கு, தெற்கு, கோயம்புத்துார் தெற்கு, சிங்காநல்லுார், பழநி, அரவக்குறிச்சி, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திட்டக்குடி, விருத்தாச்சலம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவிடைமருதுார், கும்பகோணம், திருவையாறு, திருமயம், காரைக்குடி, சிவகங்கை, மதுரை வடக்கு, மத்திய தொகுதி, திருப்பரங்குன்றம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர், திருச்சுழி, ராமநாதபுரம், திருச்செந்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு.

வர்த்தக‌ விளம்பரங்கள்