Paristamil Navigation Paristamil advert login

விஜய்க்கு யாரோ சொல்லி கொடுத்துள்ளனர்: திருமா

விஜய்க்கு யாரோ சொல்லி கொடுத்துள்ளனர்: திருமா

19 மார்கழி 2025 வெள்ளி 06:09 | பார்வைகள் : 144


த.வெ.க., தலைவர் விஜய்க்கு அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லி தந்திருக்கின்றனர்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, வி.சி., தலைவர் திருமாவளவன் வழங்கினார்.

பின், திருமாவளவன் அளித்த பேட்டி: டில்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு, அங்கேயே தங்கும் விடுதி ஏற்படுத்தி தர, முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். கொசு ஒழிப்பு பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மனுவையும் முதல்வரிடம் கொடுத்திருக்கிறோம்.

அதேபோல், மின்சார வாரிய பணி நியமனத்தில், தொழில் பழகுநர்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தினேன். த.வெ.க., தலைவர் விஜய்க்கு, 'துாய சக்தி, தீய சக்தி' என, அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கின்றனர். அதை மக்கள் முடிவு செய்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்