Paristamil Navigation Paristamil advert login

காவல்துறை ரகசியங்களை இணையத்தில் விற்பனை! - பெண் காவல்துறை கைது!!

காவல்துறை ரகசியங்களை இணையத்தில் விற்பனை! - பெண் காவல்துறை கைது!!

19 மார்கழி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 999


காவல்துறை ரகசியங்களை ஸ்னாப்சாட் சமூகவலைத்தளமூடாக விற்பனை செய்துவந்த காவல்துறை பெண் ஒருவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் ரகசியங்களை எடுத்து, அதனை 30 முதல் 250 யூரோக்கள் வரை தரவுகளுக்கு ஏற்றபடி கணக்கிட்டு அதனை விற்பனை செய்துள்ளார். Villeneuve-Saint-Georges  (Val-de-Marne) நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் 25 வயதுடைய குறித்த பெண் அதிகாரி இவ்வார செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

சைபர் குற்றங்களுக்கு எதிரான அலுவலகம் (l’Office anti-cybercriminalité (Ofac) இல் இருந்து பல தரவுகளை எடுத்து, வெளியே விற்றுள்ளார். அதில் தேடப்பட்டு வரும் நபர், என்னவகையான குற்றத்துக்காக தேடப்படுகிறார் எனும் தரவுகளை ஸ்னாப்சாட் மூலம் விற்பனை செய்துள்ளார். 

இதனால் அவர் 5,000 யூரோக்கள் வரை சம்பாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மே 13, 2025 திகதியில் இருந்து இந்த தகவல் விற்பனை இடம்பெற்றதாக பரிஸ் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்